என் அன்பிற்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.. என் மீது மிகுந்த அன்புடைய உன்னத உயிர் வாப்பா அப்துல் ஜப்பார் அவர்கள்,அவர் அனுப்பிய மின்னஞ்சலில் உங்களுடைய கவிதைகள் சிலவற்றை சமநிலை சமுதாயம் இதழில் வெளியிட்டுள்ளார்கள் அவற்றை உலகத் தமிழ்ச் செய்தி ( http://www.worldtamilnews.com/ ) இணைய வானொலி தமிழ்க்குரலில் எனது குரலில் பதிவு செய்துள்ளேன் கேட்டுப்பார் என்று எழுதியிருந்தார்.உலகத் தமிழ்ச் செய்தி இணைய வானொலி மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் அண்ணாச்சி அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. செய்திகள், கதை, கவிதை, நிகழ்ச்சித்தொகுப்புகள், இலக்கிய சொற்பொழிவுகள் என பலவற்றை ஒலி வடிவில் தருகிறது.அந்த இணைய வானொலியில் ஏற்கெனவே எனது காதலாகி கவிதை தொகுப்பு அறிவுமதி அவர்களின் அணிந்துரை, என்னுரை ஆகியவற்றோடு அப்துல் ஜப்பார் அவர்களின் குரலில் ஒலிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.மீண்டும் எனது கவிதைகள் இணைய வானொலியில் ஒலிபரப்பாவது மகிழ்வளிக்கிறது. முடிந்தால் நண்பர்கள் கேட்டுப்பாருங்கள்.
கவனிக்கப்பட்ட ''மழை ஓய்ந்த நேரம்''
சமீபத்தில்ஒரு வெள்ளிக்கிழமை காலைகைப்பேசி ஒலி கேட்டெழுந்தேன்அழைத்தது என் துணைவி மக்கத்தம்மா,சொன்ன செய்தி...''ஏங்க நம்ம மழை ஓய்ந்த நேரம் தொகுப்புக்கு
சென்னையில இயங்கற
கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையோட2004 ஆம் ஆண்டுக்கான பரிசு கிடைச்சிருக்கு''
மிகவும் மகிழ்ந்தேன்.
கவிஞர் தாராபாரதி கொள்கை பிடிப்புள்ள கவிஞர்
மொழி, இனம் என்று வாழ்ந்தவர்
அம்மாமனிதரின் பெயரிலான அறக்கட்டளையின்
பாராட்டையும், பரிசையும் பெற்றதில் மிகவும் மகிழ்கிறேன்.

Posted by
இ.இசாக்
at
11:59 PM
கவிதைகள் பற்றியான எந்த மதிப்பீடுகளும் நிரந்தரமானதல்ல,அவை இயங்குகிற தளங்களும் தான். வாய்வழி,சுவடி,அச்சு,ஒலி, இப்படியாக பதியப்பட்ட சூழல்களை விழுங்கிக் கொண்டு இணையமெனும் அறிவியல் அற்புதத்திற்குள்ளும் ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறது கவிதை.
தமிழில் மெத்த படித்தவர்களால் ஆளப்பட்ட இணைய உலகம் சாதாரண தமிழர்களின் கைக்கு மாறிக்கொண்டு வருகிறது. கல்வி மற்றும் பொருளியலில் முன்னணியில் இருக்கிறவர்கள் தங்களது ஆக்கங்களை இணையங்களில் பதிவு செய்து உலகமெங்கும் வாழும் தமிழரிடையே பரப்பி வந்தார்கள்.
அவற்றிலிருந்து மாறுபட்டு அனைத்து தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளையும் உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்திட கவிதைக்கென தனியாக வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார் கனடா வாழும் தோழர் ப.மகாதேவன்.www.vaarppu.com என்னும் முகவரியில் இயங்கும் வார்ப்பு கவிதைக்கான தளம்.
தன்னை எந்த இசத்துக்குள்ளம் அழுத்திக் கொள்ளாமல் அனைவருக்குமாக இயங்குகிறது. கவிதைகள்,கவிஞர்களின் நேர்காணல்.கவிதைநூல்கள் பற்றிய திறனாய்வு, கவிதை நிகழ்வுகள் பற்றிய பதிவு என விரிவான பணியினை வார்ப்பு ஆற்றுகிறது, இதனை அனைத்து தமிழ்க்கவிஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கவிதைகளையும்,கருத்துக்களையும் editor@vaarppu.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

துவக்கு இலக்கிய அமைப்பு
மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம்
ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும்
புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கானமாபெரும் கவிதைப் போட்டி
முதல் பரிசு: உருபா. 10,000
இரண்டாம் பரிசு: உருபா. 7500
மூன்றாம் பரிசு: உருபா. 5000
பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு
கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.
இ. இசாக்
post Box: 88256
Deira- DubaiU.A.E
சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு
மின்னஞ்சலில் அனுப்ப
thuvakku@yahoo.com
thuvakku@gmail.com
கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.சனவரி.2006
விதிமுறைகள்“’
1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.”
2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.’ 3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.”
4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.”
5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.” 6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.
மேலும் விரிவான விபரங்கள் அறிய:http://www.thuvakku.comm/ மாற்று கவிதையிதழ் http://www.koodal.com/ ஆகியவற்றை பார்க்கவும்.
தொடர்புகளுக்கு: இ. இசாக்- 00971 503418943. கவிமதி- 00971 505823764 நண்பன்- 00971 50 8497285. சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653, சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.

Subscribe to:
Posts (Atom)