on Thursday, November 24, 2005
கவிதைகள் பற்றியான எந்த மதிப்பீடுகளும் நிரந்தரமானதல்ல,அவை இயங்குகிற தளங்களும் தான். வாய்வழி,சுவடி,அச்சு,ஒலி, இப்படியாக பதியப்பட்ட சூழல்களை விழுங்கிக் கொண்டு இணையமெனும் அறிவியல் அற்புதத்திற்குள்ளும் ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறது கவிதை.

தமிழில் மெத்த படித்தவர்களால் ஆளப்பட்ட இணைய உலகம் சாதாரண தமிழர்களின் கைக்கு மாறிக்கொண்டு வருகிறது. கல்வி மற்றும் பொருளியலில் முன்னணியில் இருக்கிறவர்கள் தங்களது ஆக்கங்களை இணையங்களில் பதிவு செய்து உலகமெங்கும் வாழும் தமிழரிடையே பரப்பி வந்தார்கள்.

அவற்றிலிருந்து மாறுபட்டு அனைத்து தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளையும் உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்திட கவிதைக்கென தனியாக வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார் கனடா வாழும் தோழர் ப.மகாதேவன்.www.vaarppu.com என்னும் முகவரியில் இயங்கும் வார்ப்பு கவிதைக்கான தளம்.

தன்னை எந்த இசத்துக்குள்ளம் அழுத்திக் கொள்ளாமல் அனைவருக்குமாக இயங்குகிறது. கவிதைகள்,கவிஞர்களின் நேர்காணல்.கவிதைநூல்கள் பற்றிய திறனாய்வு, கவிதை நிகழ்வுகள் பற்றிய பதிவு என விரிவான பணியினை வார்ப்பு ஆற்றுகிறது, இதனை அனைத்து தமிழ்க்கவிஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கவிதைகளையும்,கருத்துக்களையும் editor@vaarppu.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

0 comments: